Union Budget 2022 Live: பட்ஜெட் உரை நிறைவு செய்தார் FM நிர்மலா சீதாராமன்
Budget 2022 News Live: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
Budget 2022 News Live: நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் .
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும்.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Updates
பட்ஜெட் உரை முடிந்தது:
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஒன்றரை மணி நேரம் இடைவெளியின்றி வாசித்து முடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டில் வருவான வரி விகித மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.ஜி.எஸ்.டி வரி வருவாய் அதிகரிப்பு:
பெருந்தொற்று காலத்திலும் ஜி.எஸ்.டி வரி வருவாய் அதிகரித்துள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கிரிப்டோ கரன்ஸி லாபங்களுக்கு 30% வரிவிதிப்பு:
பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மீது கிடைக்கும் லாபங்களுக்கு 30% வரி விதித்தது மத்திய அரசு.வருமான வரி ரிட்டர்னில் மாற்றம் செய்யலாம்:
வருமான வரியை தவறாக தாக்கல் செய்திருந்தால் 2 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்து கொள்ளலாம் -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்வட்டியில்லா கடன்:
மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.2022-23 நிதியாண்டில் அரசின் செலவு 39.45 லட்சம் கோடி ஆக இருக்கும். வரவு 22.8 லட்சம் கோடியாக இருக்கும்
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் ரூபாய்:
மத்திய வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும். ப்ளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.முக்கிய அம்சம்:
* பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை
* சூரிய சக்தியை ஊக்குவிக்க 19,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* பசுமை திட்டங்களை நடைமுறைப் படுத்த பசுமை பத்திரங்கள் மூலம் நிதி திரட்டப்படும்ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம்:
ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்குறைந்தபட்ச ஆதரவு விலை:
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்ய ரூ.2.37 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தும் -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்:
5ஜி தொழில்நுட்பம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2022இல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும். 2023க்குள் 5ஜி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். அனிமேஷன், கிராபிக்ஸ் துறைகள் மேம்படுத்தப்படும். இதனால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு முன்னுரிமை:
நகர்புறங்களில் மின்சார சார்ஜிங் அமைக்க போதிய இடம் இல்லாததால் பேட்டரி மாற்றும் வசதியுடைய எலக்ட்ரானிக் வாகங்கள் ஊக்குவிக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நகரங்களின் வளர்ச்சியில் கவனம்:
இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். நவீன வீடுகள், பொது போக்குவரத்து மேம்படுத்தப்படும். 80 லட்சம் பேருக்கு இந்த நிதியாண்டில் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படும். நகர்புறங்களில் உள்ள நடுத்தர மக்கள் இதனால் பயன் பெறுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புஇ - பாஸ்போர்ட்
நவீன தொழில்நுட்பத்துடன் இ- பாஸ்போர்ட் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புடிஜிட்டல் பல்கக்லைக்கழகம்:
அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மனநல சிகிச்சை திட்டம்:
பெருந்தொற்றால் பல வயதினருக்கும் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேசிய மனநல சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்வங்கிகளுடன் தபால் நிலையங்கள் இணைக்கப்படும்:
தபால் நிலையங்கள் அனைத்தும் வங்கிகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் தபால் நிலைங்களில் ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தணை செய்யப்படும். இது ஊரக பகுதி மக்களுக்கு பயன்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்100 டிவி சேனல்கள் தொடங்கப்படும்:
பெருந்தொற்று காரணமாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் பலர் 2 ஆண்டுகலாக பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு 100 டிவி சேனல்கள் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆன்லைன், மொபைல் போன், மற்றும் டிவி மூலம் பாடம் நடத்தப்படும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நீர் பாசன திட்டம்:
ரூபாய் 44,000 கோடியிலான நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோதாவரி - காவிரி - பெண்ணாறு இணைப்பு உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்:
இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மேலாண்மை உள்ளிட்டவை அடங்கிய பாடத்திட்டம் விவசாய கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
சிறுதானியங்களுக்கான ஆண்டாக அறிவிக்கப்படுகிறது. சிறுதானியங்களை உலகம் முழுவதும் வியாபாரப்படுத்த நடவடிக்கை
இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மேலாண்மை உள்ளிட்டவை அடங்கிய பாடத்திட்டம் விவசாய கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்
400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்:
நாடு முழுவதும் வரும் நிதியாண்டில் 22,000 கிலோ மீட்டருக்கு ரயில் பாதை மேம்படுத்தப்படும் -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்25 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்:
நெடுஞ்சாலைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த பட்ஜெட்டில் 25 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் உள்ளது. தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதே குறிக்கோள் -நிதியமைச்சர் சீதாராமன்பொருளாதாரம் வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதம்:
நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கொரோனா அலையை நாம் கடந்து வருகிறோம், நமது பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.தனியார் முதலீட்டை ஊக்குவிப்பு:
நாங்கள் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க விரும்புகிறோம். ஏழை மக்களின் திறனை அதிகரிக்க விரும்புகிறோம். நமது வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தக்கூடிய அத்தகைய அடித்தளத்தை அமைக்க விரும்புகிறது -நிதியமைச்சர்.கதி சக்தி திட்டம்:
பிரதமரின் கதி சக்தி மாஸ்டர் பிளான் (Gati Shakti -National Master Plan) மூலம் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும். 60 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் -நிதியமைச்சர் சீதாராமன்பொருளாதார மறுமலர்ச்சி:
தடுப்பூசியின் நோக்கத்தை அதிகரிப்பது பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவியது -நிதியமைச்சர் சீதாராமன்இந்தியாவை சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நாம் இருந்தாலும், 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டு இருந்தது -நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் #UnionBudget2022-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டுக்கு முன் விமானப் பயணம் தொடர்பான அப்டேட்டும் வந்துள்ளது. தற்போது விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருக்கும்.
பட்ஜெட்டுக்கு முன்பே டெல்லி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி கிடைத்துள்ளது. டெல்லியில் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் ரூ.91.50 குறைந்துள்ளது.
பட்ஜெட் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது பட்ஜெட் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் மீதான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பட்ஜெட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும்.
அமைச்சரவைக் கூட்டங்களுக்காக கேபினட் அமைச்சர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தை அடைந்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கான்வாய் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரட், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
7வது மாத ஜிஎஸ்டி வரி வசூல்
தொடர்ந்து 7வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதுபட்ஜெட் தாக்கலுக்கு முன்பே சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ் 650 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய சந்தை, நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது.
நிதியமைச்சகத்திலிருந்து நிர்மலா சீதாராமன் வெளியே வந்தார். மீடியாக்கள் முன் வந்து கணக்கு புத்தகங்களையும் காட்டினார். இதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், 'ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளடக்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதன் மூலம் அனைவரும் பயனடைவார்கள்.
2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 2020-21-ல் 7.3 சதவீதம் என்பதற்கு மாறாக 2021-22-ல் (முதலாவது மதிப்பீட்டின்படி) உறுதியான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.