Budget 2024: மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி உறுதி - நிர்மலா சீதாராமன்

Thu, 01 Feb 2024-1:15 pm,

FM Nirmala Sitharaman`s Union Budget 2024 Updates : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

FM Nirmala Sitharaman's Union Budget 2024 Updates in Tamil : 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் புதிய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதனையொட்டி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மக்களை நேரடியாக சென்றடைக்கூடிய வகையிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களை குறி வைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Latest Updates

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை

    பால் கொள்முதலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மத்திய அரசின் நோக்கம் என்ன? நிர்மலா சீதாராமன்

    மக்களுக்கான திட்டங்களை செய்வதே மத்திய அரசின் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : இடைக்கால பட்ஜெட்டை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்

    இடைக்கால பட்ஜெட் தாக்கலை நிறைவு செய்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நாட்டின் மொத்த நிதிப்பற்றாக்குறை - நிர்மலா சீதாராமன்

    2024-25ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : வருமான வரியில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமானவரி விதிகதங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : வரி விதிப்புகளில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விதிகதங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : வரி விதிப்புகளில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பு விதிகதங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி - நிர்மலா சீதாராமன்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலையில் நாங்களே நாட்டின் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம் என கூறினார். அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆரவார குரல் எழுப்பினர். 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : 500 மில்லியன் டாலர் அந்திய முதலீடு

    கடந்த 10 ஆண்டுகளில்500 மில்லியனுக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : புது பொலிவு பெறும் லட்சத்தீவு

    லட்சத் தீவுகளில் சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : புதிய மருத்துவ கல்லூரிகள்

    "பல்வேறு துறைகளின் கீழ் இருக்கும் மருத்துவக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் பல மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் மாற்றம்

    40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : விவசாய துறையில் தனியார் பங்களிப்பு

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "விவசாயத் துறையின் மேலும் வளர்ச்சிக்காக, அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை."என தெரிவித்துள்ளார்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : டீப் டெக் தொழில்நுட்பங்கள்

    "பாதுகாப்பு நோக்கங்களுக்காக டீப் டெக்னாலஜி, தொழில்நுட்பங்களை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கையை விரைவுபடுத்தவும் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : 2 கோடி வீடுகள் கட்ட நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் கூறுகையில், “கோவிட் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கிராமப்புறங்கள் மேம்பாடு தொடர்ந்தது. 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட நெருங்கிவிட்டோம். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : கர்ப்பப்பை தடுப்பூசி

    கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : அங்கன்வாடி ஊழியர்களுக்கான அறிவிப்பு

    "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மின்சாரம் இலவசம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

     

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பட்ஜெட் முக்கிய அம்சங்கள் - நிர்மலா சீதாராமன்

    - பொருளாதாரம் நன்றாக உள்ளது
    - மக்களின் சராசரி உண்மையான வருமானம் 50% அதிகரித்துள்ளது.
    - அனைத்துத் துறைகளின் வளர்ச்சியின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகிறது.
    - அனைத்து வகையான உள்கட்டமைப்புகளும் சாதனை நேரத்தில் கட்டமைக்கப்படுகின்றன.
    - நாட்டின் அனைத்து பகுதிகளும் பொருளாதார வளர்ச்சி செயலில் பங்கு வகிக்கின்றன.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : ஸ்கில் இந்தியா மிஷன்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இடைக்கால பட்ஜெட் 2024-25 | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ஸ்கில் இந்தியா மிஷன் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, 54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மற்றும் மறுதிறன் அளித்து, 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நிறுவன உயர்கல்வி, அதாவது 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள். , 15 AIIMS மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன."

     

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பெண் கல்வி

    கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் கல்வி பயில்வது 28 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பிரஞ்யானந்தாவுக்கு பாராட்டு

    தமிழக செஸ் வீரர் பிரஞ்யானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு. இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி வருவதாகவும் பெருமிதம்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : தேசிய கல்விக் கொள்கை

    தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வித்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு

    கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : சிலிண்டர், வீடு, குடிநீர் உறுதி

    ஏழை எளிய மக்களுக்கு தேவையான வீடு, குடிநீர் ஆகியவற்றை மத்திய அரசு உறுதி செய்திருப்பதுடன் அனைவருக்கும் கேஸ் சிலிண்டர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது - நிர்மலா சீதாராமன் 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் - நிர்மலா சீதாராமன்

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - நிர்மலா சீதாராமன்

    மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளால் மீண்டும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என நிர்மலா சீதாராமன் பேச்சு

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : எல்லோருக்கும் எல்லாம் - நிர்மலா சீதாராமன்

    அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்கள் மத்திய அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன - நிர்மலா சீதாராமன்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 -25 தாக்கல் செய்ய தொடங்கினார். 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : வேலையின்மை அதிகரித்துவிட்டது - காங்கிரஸ்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பேசிய, காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, "நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகள் பணவீக்கம் மற்றும் வேலையின்மை..." என கூறினார்

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : குடியரசு தலைவருடன் சந்திப்பு

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள் - வைகோ

    பட்ஜெட் குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மக்களை ஏமாற்ற பாஜக முயற்சிக்கும் என விமர்சித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : எந்த அறிவிப்பும் இருக்காது - திமுக

    "இந்த பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசு  எந்த கொள்கை அறிவிப்பையும் வெளியிட முடியாது. இது இடைக்கால பட்ஜெட். வாடிக்கையான ஒன்று, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்" என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பட்ஜெட் உருவானது எப்படி?

    பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா?. பட்ஜெட் என்ற வார்த்தை பிரஞ்சு வார்த்தையான buget என்பதிலிருந்து உருவானது. தோல் பை என்பது இதன் பொருள்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நாடாளுமன்றத்துக்கு சென்ற பட்ஜெட் ஆவணங்கள்

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பட்ஜெட்டில் மாற்றம்

    இந்தியாவில் பட்ஜெட்டை ப்ரீஃப்கேஸில் கொண்டு வரும் மரபு காலம் காலமாக இருந்தது. இதற்கு 2019 ஆம் ஆண்டு முதல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சிவப்பு பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு சிறப்பு கோப்புறையில் பட்ஜெட்டைக் கொண்டு வரப்படுகிறது. அதில் தேசிய சின்னமும் இருக்கும். 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : டெல்லியில் மழை

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிதியமைச்சகத்திற்கு வருகை தந்தார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிதியமைச்சகத்திற்கு வருகை தந்தார்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மோடி அரசின் கடைசி பட்ஜெட்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : கிராம புற பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

    இடைக்கால பட்ஜெட்டில் மகாத்மா காந்தி கிராமபுற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : மானியம், கடனுதவி அறிவிப்பு

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மானியம் மற்றும் கடனுதவி சார்ந்த அறிவிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : வரி குறைப்பு மீது எதிர்பார்ப்பு

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தொழில் துறையினருக்கான வரி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி பட்டியலில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நிர்மலா சீதாராமன் சாதனை

    நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6வது முறையாக மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். அத்துடன் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். அவருடயை சாதனையையும் சமன் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன்.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை

    விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • FM Nirmala Sitharaman's Union Budget 2024 Live Updates : நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

    ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 -25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link