புதுடெல்லி: இன்று முதல் அமலுக்கு வந்த 5 சதவீத ஜிஎஸ்டி அதிகரிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிக செலவை ஏற்படுத்தியிருக்கிறது. மாவு, தயிர் உட்பட பேக்கேஜ் செய்து விற்கப்படும் உணவுகளுக்கான விலை இன்று முதல் அதிகரித்துள்ளது. முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுகளுக்கான தள்ளுபடியை மத்திய அரசு திரும்பப் பெற்றதால் மக்களின் செலவு அதிகரித்துள்லது. 1,000 ரூபாய் வரையிலான தினசரி ஹோட்டல் தங்குமிடங்களுக்கான வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன் வரி இல்லாமல் இருந்தது. இதனால் உணவு முதல் சுற்றுலா வரை மக்களின் வாழ்க்கைக்கான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவுப் பொருட்களுக்கு வரி அதிகரித்திருப்பதைத் தவிர, அச்சிடுதல், எழுதுதல் அல்லது மை வரைதல், கரண்டிகள், முட்கரண்டிகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள், எல்இடி விளக்குகள் போன்ற பொருட்களுக்கான வரி விகிதம் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, ஒரு நாளைக்கு ரூ. 5,000க்கு மேல் உள்ள மருத்துவமனை அறை வாடகைக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும், ஆனால் ஐசியூவில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு மட்டும் 5 சதவிகித ஜி.எஸ்.டியில் இருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஜூலை 18 முதல் பல பொருட்கள், சேவைகளின் விலைகளில் ஏற்றம்


பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களுக்கு இந்த விலையுயர்வு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும். ஜூலை 18 முதல், மக்களுக்கு அத்தியாவசியமான பல அன்றாடப் பொருட்களான விலை உயர்ந்ததற்கு காரணம், ஜிஎஸ்டியின் 47வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்தது? எவற்றின் விலை குறைந்தது? தெரிந்துக் கொள்ளுங்கள்.


விலை உயர்ந்த பொருட்கள்:


டெட்ரா பேக் தயிர், லஸ்ஸி மற்றும் மோர் ஆகியவற்றின் விலை அதிகரித்தது


காசோலை புத்தகம் வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் காசோலைக்கான கட்டணமும் அதிகரித்தது


5,000 ரூபாய்க்கு மேல் வாடகையுள்ள மருத்துவமனை அறைகளின் விலை உயர்ந்தது.  ஐசியுக்கு மட்டும் விதிவிலக்கு


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி


அட்லஸ் உட்பட வரைபடங்கள் மற்றும் சார்டுகளின் விலை உயர்வு


ரூ.1,000க்கு குறைவாக ஹோட்டல் அறைகளின் வாடகைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் இனி ஹோட்டல் அறைகளுக்கான வாடகை அதிகரித்தது


எல்இடி லைட்டுகள், எல்இடி லேம்புகள் அகியவற்றுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது


பிளேடுகள், காகித கத்தரிக்கோல், பென்சில் ஷார்ப்பனர்கள், கரண்டிகள், ஃபோர்க் ஸ்பூன்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் கேக்-சர்வர்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்ந்ததால் விலை அதிகரித்தது


மேலும் படிக்க | ஆபத்தான 12 டன் சரக்குகளுடன் கிரீஸில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் சரக்கு விமானம்


விலை மலிவான பொருட்களும் சேவைகளும்


ரோப்வே மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ஜிஎஸ்டி வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்ததால் விலை குறையும்


மருத்துவத்த்துறையில் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையில் சற்று குறைவு ஏற்படலாம். பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை உறுப்புகள், உடல் உள்வைப்புகள், உள் கண் லென்ஸ்கள் விலை குறைகிறது.


எரிபொருள் தொடர்பான சரக்குகளை எடுத்துச் செல்லும் ஆபரேட்டர்களின் கட்டணத்தில் ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.


பாதுகாப்புப் படைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு IGST பொருந்தாது.


மேலும் படிக்க | ITR 2022 Filing Last Date: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR