பிஹாரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிஹார் (Bihar) சட்டபேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பிஹாரில் சீதா தேவிக்கு மிகப்பெரிய கோயில் கட்டப்படும் என்றும், அது அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராம் கோவிலை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும் கூறினார்.


பிஹாரில் சீதாமர்ஹி பகுதியில் தேர்தல் பிராச்சாரத்தில் பேசிய போது அவர் இதை தெரிவித்தார். சீதாம்ர்ஹியில் தான், ஜனக மாகராஜா, நிலத்தை உழும் போது, சீதையை பூமியிலிருந்து கண்டெடுத்தார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.


சீதா தேவி இல்லாமல் பகவான் ராமர் முழுமை அடையமாட்டார் எனக் கூறிய சிராக் பாஸ்வான், அயோத்தியின் ராமர் கோயிலையும் சீதாமாரியையும் இணைக்கும் ஒரு கார்டார் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.


லோக் ஜன சக்தி ஆட்சிக்கு வரும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என அவர் உறுதிபடக் கூறினார்.பாஜக தலைமையில், லோக ஜன சக்தி கட்சி இணைந்து ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார். 


பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி எங்களுடையது. எனவே நாங்கள் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எதிராகத்தான் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோமே தவிர பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தவில்லை என  சிராக் பஸ்வான் தெரிவித்தார்.


மேலும் படிக்க | "பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சில் சுமக்கும் ஹனுமன் நான்": Chirag Paswan


 “எங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளபடி, சீதா கோயிலின் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வோம். மேலும் சீதாமர்ஹியை அயோத்தியுடன் இணைக்க ஆறு வழிச் சாலை அமைப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என சிராக பாஸ்வான் கூறினார்.


மேலும் படிக்க | மதசார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது: Mukhtar Abbas Naqvi


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR