பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாரணாசியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் வீழ்த்த முடியாத அணியாகவே இந்திய அணி விளங்கி வருகிறது. 


இந்த வெற்றியை தொடரும் எண்ணத்தில் இந்திய அணியும், இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணியும் களமிறங்குவதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே மழையின் குறுக்கீட்டால் 4 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டிக்கும் மழையின் அச்சுறுத்தல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடக்கும் இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியில், இந்திய அணி வெற்றிபெற வேண்டி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.


கங்கை நதியில், இந்திய தேசிய கொடி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் புகைப்படங்களை வைத்து இந்த பூஜை நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.