கர்ப்பிணி பெண்ணை 12 km கட்டிலில் சுமந்து சென்ற கிராம மக்கள்!
ஒடிசாவில் கர்ப்பிணியை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது!!
ஒடிசாவில் கர்ப்பிணியை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது!!
ஒடிசா மாநிலம் காளஹண்டி மாவட்டம் உள்ளது நெஹலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு முறையான சாலை வசதிகள் எதுவும் இல்லை. இதை தொடர்ந்து, அவர்கள் ஆம்புலன்ஸ் வசதியை பெற வேண்டுமெனில் தங்களது கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கனிகுமா கிராம் நகரை வந்தடைய வேண்டும்.
இதை தொடர்ந்து அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு 12 கி.மீட்டர் தொலைவை கடந்து கனிகுமா கிராமத்தை அடைந்தனர். கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்தபடியே, வழியில் குறுக்கிட்ட ஜெலிங்கதோரா ஆற்றையும் கடந்து சென்றனர். பின்னர் கனிகுமாவில் இருந்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.