புது டெல்லி: ஊரடங்கு உத்தரவின் இரண்டாம் கட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னபே தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள். இருப்பினும், மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அங்கு சில தளர்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடுகள் தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 28 நாட்களில் COVID-19 தொற்று எதுவும் பதிவாகாத ‘பசுமை மண்டலங்கள்’ என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் சில தளர்வுகளைக் காணலாம் என்று கூறப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ள ‘சிவப்பு மண்டலத்தில்’ கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிகிறது.


தளர்வுகளைப் பொருட்படுத்தாமல், சமூக விலகல் விதிமுறைகள் மற்றும் வீட்டைவிட்டு வெளியில் காலடி எடுத்து வைக்கும் போது முகக்கவசம் அணிவது ஆகியவை வரும் மாதங்களில் தொடர்ந்து இருக்கும். இதுக்குறித்து இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி வார இறுதியில் அறிவிப்பார்.


ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கக்கூடியது இங்கே:


கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படலாம்.
அலுவலகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்படலாம்.
சந்தைகள் மற்றும் சில சேவைகள் மாற்று நாட்களில் மற்றும் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊழியர்களின் திறனில் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் தனியார் வாகனங்களின் இயக்கம் அனுமதிக்கப்படலாம்.


ஊரடங்கு உத்தரவின் மூன்றாம் கட்டம் முழுவதும் நீட்டிக்கப்படக்கூடிய சில கட்டுப்பாடுகள்:


1. ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் மத இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
2. பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கும். அறிக்கையின்படி, கல்வி நிறுவனங்களுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படலாம். 
3. பொது போக்குவரத்து சாலைகளில் இருந்து விலகி இருக்கும்.
4. விமான மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும்.
5. பொது மற்றும் சமூக கூட்டங்களுக்கு தடை தொடரும்.


தொடரக்கூடிய தளர்வு / கட்டுப்பாடு:


இந்தியா முழுவதும் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் அக்டோபர் 15 வரை மூடப்படும் என்று ஆரம்பத்தில் வதந்திகள் வந்தாலும், ஏப்ரல் தொடக்கத்தில் பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) இது போலி செய்தி என்று தெளிவுபடுத்தியது.


ஏப்ரல் 24 அன்று, உள்துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது, மேலும் குடியிருப்பு வளாகங்கள், மக்கள் வசிக்கும் அக்கம், பக்கம் கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகளை திறக்க அனுமதித்துள்ளது. ஒரு மாநகராட்சியின் எல்லைக்குள் வரும் பகுதிகளில் இருக்கும் சந்தை வளாகங்கள் மற்றும் மால்களுக்குள் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படாது. நகராட்சி நிறுவனங்களின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில், சந்தை வளாகங்களுக்குள் உள்ள கடைகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


கடைகள் 50% ஊழியர்களை மட்டுமே பணியில் வைத்துக்கொள்ள வேண்டும். முகமூடிகளை அணிந்துகொள்வதும் சமூக தூரத்தை பராமரிப்பதும் கட்டாயமாகும்.


எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அல்லது COVID-19 ஹாட்ஸ்பாட்களாக நியமிக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது பகுதிகளுக்கு இது பொருந்தாது.


இதில் உணவகங்கள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் இயங்காது. அவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். 


மதுபான விற்பனை இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 


பல முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்: 


திங்களன்று நடைபெற்ற மூன்று மணி நேர வீடியோ மாநாட்டுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்களுடன் ஊரடங்கு உத்திகள் குறித்து விவாதித்தார். பல முதல்வர்கள் மீண்டும் ஊரடங்கு ஆதரவாக இருந்தபோது, ​​சிலர் பச்சை மண்டலங்களில் தளர்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 


சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றிய பிறகு (14 நாட்களில் புதிய கோவிட் -19 வழக்குகள் எதுவும் இல்லை), பின்னர் பசுமை மண்டலங்களாக மாற்ற மாநிலங்களின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.


ஒரு சில முதலமைச்சர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிரச்சினையை எழுப்பிய போதிலும், இது தொடர்பாக ஒரு நல்ல முடிவு வரும் எனவும் பிரதமர் கூறினார்.