நந்தூர்பார், மகாராஷ்டிரா: கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று மீண்டும் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதில் மிக அதிகமாக மகாராஷ்டிராவில் தொற்று பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இங்கு தினமும் 400 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுநோயை பரவுவதைத் தடுக்க மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு (Night Curfew) மற்றும் ஊரடங்கு (Lockdown) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் கூட்டமாக ஒன்று சேரவேண்டாம் என்றும், அதிகம் கூட்டம் சேரும் இடங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனித்துவமான விதி நாசிக்கில் செயல்படுத்தப்பட்டது:
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டும் சந்தைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தைகளுக்கு செல்லலும் மக்கள் சமூக தூரத்தைப் பின்பற்றுவதை எளிதாக்குவதற்காக, ஒரு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தைக்குச் செல்லும்போது ஒவ்வொரு நபரும் 5 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு டிக்கெட் வழங்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு செல்லுபடியாகும். இந்த டிக்கெட் யாருக்கு வழங்கப்படுகிறதோ, அவர்கள் மட்டும் சந்தைக்கு செல்ல முடியும்.


1 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும்:
அந்த அறிக்கையின்படி, ஐந்து ரூபாய் டிக்கெட் எடுத்த பிறகு, ஒரு நபர் ஒரு மணி நேரம் மட்டுமே சந்தையில் பொருட்கள் வாங்க முடியும். எந்தவொரு நபரும் 1 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், அவர் ரூ .500 அபராதம் செலுத்த வேண்டும். நாசிக் மாநகராட்சி இந்த கட்டணத்தை வசூலிக்கும்.


ALSO READ | No More Lockdown: முழு ஊரடங்கு போடக்கூடாது என மகாராஷ்டிரா அரசுக்கு தொழில்துறை துறை எச்சரிக்கை


தற்போது, ​​நாசிக் மாவட்டத்தில் நெரிசலான சந்தைகளான ஷாலிமார், திலக் சாலை, பாட்ஷாஹி கார்னர், துமல் பாயிண்ட், மெயின் ரோடு, சிவாஜி சாலை, பிரதான சந்தைக் குழு, சிட்டி சென்டர் மால் போன்றவற்றில் இந்த விதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சந்தைகளிலும் நுழைவதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கும், அதே நேரத்தில் மக்கள் 5 ரூபாய் டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும். இது தவிர, கடைக்காரர்களுக்கும், தெரு விற்பனையாளர்களுக்கும் பாஸ் வழங்கப்படும். அதே நேரத்தில் சந்தை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டையைக் காட்டிய பின்னரே உள்ளே நுழைய அனுமதி கிடைக்கும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR