புதுடெல்லி: டெல்லி மெட்ரோ (Delhi Metro) 26 ஆண்டுகளை முடிக்கப் போகிறது, இதன் காரணமாக DMRC மெட்ரோ க்விஸ் (MetroQuiz) போட்டியைத் தொடங்கியுள்ளது. DMRC தனது சமூக ஊடக மேடையில் மக்களிடமிருந்து வெவ்வேறு வினாவிடைக்களைக் கேட்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரடங்கின் போது டெல்லி மெட்ரோ இயங்கவில்லை, ஆனால் வினாவிடை மூலம் மக்களை இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் பலர் அவர்களுடன் சேர்ந்துள்ளனர், ஆனால் இந்த போட்டியில் ஏதோ வித்யாசமான ஒரு விஷயம் நேர்ந்ததுள்ளது. அது என்னவென்றால்.,


சமூக ஊடகங்களில் ஊரடங்கு செய்யப்பட்டதால் மக்கள் டி.எம்.ஆர்.சி யிடம் வேலை கோரியுள்ளனர், அதற்கு பதிலளிக்கும் விதமாக டி.எம்.ஆர்.சி என்ன கூறியது என்று தெரிந்து கொள்வது அவசியம்.


“நான் வேலை தேடுகிறேன், நான் எலக்ட்ரிக்கல் டிப்ளோமா முடித்து உள்ளேன். டி.எம்.ஆர்.சி.யில் ஏதேனும் பதவியில் வேலைக்கு விண்ணப்பிக்கலாமா? என்று ஆஷிஷ் சிங் மற்றும் அங்கீதா என்ற சமூக ஊடக பயனர்கள் மெட்ரோவிடம் கேட்டுள்ளனர். 



இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த மெட்ரோ, வணக்கம் எங்களுக்கு எழுதியதற்கு நன்றி! வேலை தொடர்பான அனைத்து தகவல்களும் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. நீங்கள் எங்களுடன் தொடர்பில் இருங்கள்.


மெட்ரோவின் இந்த பதிலை பலர் பாராட்டினர். குறிப்பாக ஊரடங்கின் ஒரு பெரிய வேலை பற்றாக்குறை இருக்கும்போது, டி.எம்.ஆர்.சியின் பதில் மெட்ரோவில் வேலை பெறும் முறைகள் பற்றி தெரியாமல் இருந்த அனைவருக்கும் பயனளிக்கும்.