கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் இங்கு ஜீன் 1 முதல் ஊரடங்கில் தளர்வுகள்
மே 31 க்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (மே 28, 2021) அறிவித்தார். கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளை மே 31 முதல் மீண்டும் தொடங்க தில்லி அரசு அனுமதித்துள்ளது.
புதுடெல்லி: மே 31 க்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (மே 28, 2021) அறிவித்தார். கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளை மே 31 முதல் மீண்டும் தொடங்க தில்லி அரசு அனுமதித்துள்ளது.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), “தற்போதிருக்கும் ஊரடங்கு திங்கள் அதிகாலை 5 மணி வரை நீடிக்கும். அதன் பிறகு கட்டம் கடமாக அன்லாக் செயல்முறையைத் தொடங்குவோம். தினக்கூலித் தொழிலாளர்களை மனதில் கொண்டு கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும்." என்று கூறினார்.
தேசிய தலைநகரில் நேர்மறை விகிதம் இப்போது 1.5 சதவீதமாக உள்ளது என்பதையும் தில்லி முதல்வர் தெரியப்படுத்தினார்.
"நேர்மறை விகிதம் 1.5% ஆக குறைந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேர் புதிதாக தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று டெல்லி முதல்வர் கூறினார்.
ALSO READ: Oxygen பற்றாக்குறையால் இறந்த Corona நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: டெல்லி அரசு
27,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை குறைந்து தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார்.
டெல்லியில் (Delhi) தொற்றின் அளவு மிக அதிகமானதைத் தோர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் 2021 ஏப்ரல் 19 அன்று லாக்டவுனை அறிவித்தார். அதன் பீறகு பலமுறை அது நீட்டிக்கப்பட்டது. கடைசியாக 2021 மே 23 அன்று நீட்டிக்கப்பட்டது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் நேர்மறை விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து மாநில அரசு யோசித்து வருகிறது. எனினும், டெல்லியில் இன்னும் கோவிட் சார்ந்த இறப்புகள் அதிகமாகத்தான் உள்ளன. மேலும், தடுப்பூசி தட்டுப்பாடும் இங்கு அதிகமாக உள்ளது.
மேலும், தேசிய தலைநகரில் உள்ள சுமார் 80 சதவீத வர்த்தகர்கள் ஜூன் 1 க்குப் பிறகு தில்லி அரசாங்கம் லாக்டவுனை நீக்கிவிட்டு, ‘கடுமையான நிபந்தனைகளுடன்’ சந்தைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விரும்புவதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த கோவிட் -19 நோயாளிகளின் உறவினர்களுக்கு ரூ .5 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதாகவும் தில்லி அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டின் கட்டமைப்பை உருவாக்க, ஆம் ஆத்மி கட்சி அரசு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
ALSO READ: குறையும் தொற்று எண்ணிக்கை: ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க அரசு பரிசீலனை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR