பெங்களூருவில் COVID-19 பரவலை கட்டுப்படுத்த Lockdown அமல் செய்ய கர்நாடகா CM உத்தரவு
பெங்களூருவில் (Bengaluru), குறிப்பாக கொரோனா (Corona) தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக (Karnataka) முதல்வர் பி. எஸ். எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பெங்களூருவில் (Bengaluru), குறிப்பாக கொரோனா (Corona) தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக (Karnataka) முதல்வர் பி. எஸ். எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதலமைச்சர் நடத்திய கூட்டத்தின் முக்கிய அம்ட்சங்கள்:
ALSO READ |COVID 19- ஆரோக்யா சேது செயலி கட்டாயம், விமான கேபின் குழுவினருக்கு DGCA உத்தரவு
1. பெங்களூருவில், கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, அதை கட்டுபடுத்த முடியும் என்று கூறிய முதலவர் பி. எஸ். எடியூரப்பா, இது தொடர்பாக அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
2. பெங்களூருவில், குறிப்பாக கொரோனா தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
3. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சீல் வைப்பதோடு குவாரண்டைன் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
4. தனியார் மருத்துவமனைகளில், கோவிட் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5. சமூக நல விடுதிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை சிறப்பாக வழங்கவும், அங்கு சுகாதாரத்தை பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
6. பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்காத வண்ணம் கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இதற்காக கடுமையாக போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
7. கோவிட் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
ALSO READ | கோவிட் -19 தொற்றுகள் ஆகஸ்ட் 15 க்குள் கர்நாடகாவில் 25,000 ஐத் தொடக்கூடும்
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் டாக்டர். CN அஷ்வத் நாராயணா, வருவாய் துறை அமைச்சர் ஆர். அஷோகா, உள்துறை அமைச்சர் பஸவராஜா பொம்மை, மாநில அரசின் தலைமை செயலர் விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை செயலர் வந்திதா ஷர்மா மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.