கடும் அமளி, எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஸ்லீம் பெண்ணை மூன்று முறை தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்யும் முறைக்கு முடிவு கட்டுவது பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடுப்பு மசோதா, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் நிலுவையில் வைக்கப்பட்டது.


அதில் சில திருத்தங்களை செய்து நேற்று மாநிலங்களவையில் மீண்டும் அரசு தாக்கல் செய்துள்ளது. நேற்று ஒரே நாளில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பத்து முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்.பிக்கள் பதவியேற்றநிகழ்வுக்கு பின்னர் இன்று முதல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன. 



இந்த நிலையில் கூட்டத்தொடரில் முதலாவதாக 'முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா' இன்றுமக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இது பெண்களின் நீதி மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. சட்டங்களை உருவாக்க மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டங்களை உருவாக்குவது எங்கள் வேலை. டிரிபிள் தலாக் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே சட்டம்.