மக்களவை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய ஆறாவது வேட்பாளர் பட்டியலை, பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த பட்டியலை வெளியிட்ட மத்திய அமைச்சர் J.P.நட்டா, பாஜக சார்பில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.


இந்த பட்டியலில், பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்கள் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்த கரிய முண்டாவிற்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் போட்டியிட்ட குந்தி தொகுதியில், இம்முறை ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் அர்ஜூன் முண்டா போட்டியிடுகிறார்.



இதேபோல், இமாச்சல் பிரதேசத்தின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சாந்தா குமாருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கிஷான் கபூர், காங்ரா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.