4-வது கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
9 மாநிலங்களில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வடைந்தது.
9 மாநிலங்களில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வடைந்தது.
பாராளுமன்ற தேர்தல், பரபரப்பான 4-வது கட்டத்தை எட்டி உள்ளது. பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மராட்டியத்தில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8, காஷ்மீரில் 1 என 9 மாநிலங்களில் 72 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
4-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 936 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்குறிப்பிட்ட 71 தொகுதிகளிலும் 1.40 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
72 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், கன்னாஜில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச் செல்லும் பணி தொடங்கி உள்ளது.