2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ராகுல் காந்தி தனது வாக்கை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம், நரேந்திர மோடியை பிரச்சாரத்தில் வெறுப்பை பயன்படுத்தினார். நாங்கள் அன்பைப் பயன்படுத்தினோம். இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்.


 



முன்னதாக, இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மே 12) ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.


இன்று (மே 12) உத்திரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், டில்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.


உ.பி. மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.