மக்களவை தேர்தலுக்கான BJP அறிக்கையை வெளியிட்ட மோடி & ஷா...
2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா வெளியிட்ட்டனர்!!
2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா வெளியிட்ட்டனர். பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
> வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.
> 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
> வேளாண்மை, ஊரக வளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி
> ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்
> உள்கட்டமைப்புத்துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி
> தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்
> ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும்
> சட்ட விதிகளுக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
> அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
> சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்
> விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும்
> அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்து GST நடைமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும்
> 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்
> 2024க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்
> சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்
> கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
> சிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்
> 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியிலா கடன் வழங்கப்படும்
> முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்
> மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்
> நாடு முழுவதிலும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்
> விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை.
> நவீன கால சூழல்களை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
> நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்
உலக அளவில் இந்தியாவை ஒரு பொருட்டாகவே கருதாத நாட்கள் இருந்தன; இந்த 5 ஆண்டுகளில் அனைத்தும் மாறியிருக்கிறது என தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேச்சு
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிஜேபி கட்சி மக்களவை தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதில் தேசியவாதத்தையும் வளர்ச்சியையும் முன்வைத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உள்பட முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி, காசி மதுராவை இணைத்த ஆன்மீக சுற்றுலா வளாகமாக அமைக்கவும் திட்டம் வெளியாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு இந்த தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் பெறும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி என்ற பாஜகவின் பிரச்சார முழக்கத்தை அருண்ஜெட்லி வெளியிட்டார்.