மோடி அவர்களே! டெல்லி பெண்ணாக சவால் விடும் பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி, சமீபத்தில் தேர்தல் பரப்புரையின்போது, ‘ராஜீவ் காந்தியை முன்வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முடியுமா?` பிரியங்கா காந்தி கேள்வி!!
பிரதமர் மோடி, சமீபத்தில் தேர்தல் பரப்புரையின்போது, ‘ராஜீவ் காந்தியை முன்வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முடியுமா?' பிரியங்கா காந்தி கேள்வி!!
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பரப்புரையின்போது, ‘ராஜிவ் காந்தியை முன்வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலடி தரும் வகையில் பிரியங்கா காந்தி, ‘டெல்லி பெண்ணாக உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். கடைசி கட்ட நாடாளுமன்றத் தேர்தல்களை பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாக சொன்னதை முன் வைத்து சந்தியுங்கள்' என்று மோடிக்கு பதில் சவால் விட்டுள்ளார்.
டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரியங்கா, “பிரதமர் மோடியின் நிலைமை, வீட்டுப் பாடத்தை முடிக்காத ஒரு பள்ளிக் குழந்தையினுடையது போன்றது. பள்ளிக்கு வரும் அந்த குழந்தையிடம், ஏன் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்று கேட்டால், ‘நேரு, எனது வீட்டுப் பாடத்தை மறைத்து வைத்துவிட்டார்', ‘இந்திரா காந்தி, எனது வீட்டுப் பாட தாளில் விளையாட்டுப் பொருள் செய்துவிட்டார்' என்று சொல்வது போலத்தான் மோடியின் நிலைமை உள்ளது” என்று விமர்சித்தார்.
முன்னதாக பிரியங்கா காந்தி, சாலை மார்க்கமாக டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டார். டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா திக்ஷித்திற்காகவும், தென் டெல்லியில் இருந்து போட்டியிடும் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்காகவும் அவர் பிரசாரம் செய்தார். அரசியலில் பிரியங்கா காந்தி, அதிகாரபூர்வமாக குதித்ததில் இருந்து இப்போதுதான் முதன்முறையாக டெல்லியில் நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரியங்காவின் பிரசாரம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “அவர், தனது நேரத்தை வீண்டித்துக் கொண்டிருக்கிறார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் அவர் ஏன் பிரசாரம் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார் பிரியங்கா. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்கிறார் பிரியங்கா. ஆனால், பாஜக-வுடன் எங்கு நேரடி போட்டி இருக்கிறதோ அங்கு சென்று பிரசாரம் செய்ய அவர் முன்வருவதில்லை” என்று விமர்சித்துள்ளார்.