2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. களத்தில் மொத்தம் 1279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலையங்களில் காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களிக்களித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் வேண்டுகோள் வைத்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், முதல் முறையாக வாக்களிக்கும் அனைவரும் எனது வாழ்த்துக்கள். மேலும் கடந்த ஆட்சியில்(மோடி அரசு) கொடுத்த வாக்குறுதியான, 2 கோடி வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய், அச்சே தின் (நல்ல நாள்) வரப்போகுது எனக் கூறிய எதுவும் நடைபெறவில்லை. 


அதற்க்கு மாறாக பணமதிப்பிழப்பு, வேலையின்மை, விவசாயிகள் துயரம், அதிகப்படியான வரிகள், பொய்களை கூறுவது, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு, பிரிவினைவாதம், வெறுப்புணர்வு போற்றவை தான் பாஜக அட்சியில் இருந்து. 


எனவே நாட்டின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்!!


இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.