மத்திய பிரதேச மாநிலத்தின் விதிஷா பகுதியில் இருந்து லோக் சபா உறுப்பினர் தேர்தெடுக்கப்பட்டார் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ். இவர் இந்தியாவின் வெளித்துறை அமைச்சராக உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருந்த இவர்,  இதுவரை ஏழு முறை எம்பி-யாகவும், மூன்று முறை எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 


1977 ஆம் ஆண்டு தனது 25 வயதில், அரியானா மாநிலத்தின் மந்திரிசபை அமைச்சராகவும் ஆனார். இளம் வயதிலேயே மந்திரிசபை அமைச்சர் ஆனார் என்ற பெருமையை பெற்றார். 1998 ஆம் ஆண்டு டெல்லிடின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.


தற்போதைய இந்தியாவின் வெளித்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து பாஜக மேலிடத்துக்கு தகவல்கள் அனுப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.


கடந்த ஆண்டில் (2016) சுஷ்மா ஸ்வராஜ் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் காரணமாக தான் இப்படி ஒரு முடிவை சுஷ்மா ஸ்வராஜ் எடுத்திருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.