Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார் - கண்டிஷன் இதுதான்
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணியும் 230க்கும் மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அனைத்து ஊடக கருத்து கணிப்புகளும் தெரிவித்த நிலையில், அவை அனைத்தும் பொய் என இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கிறது. இந்த சூழலில் அடுத்து மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏனென்றால், பாஜக கூட்டணிக்கு இப்போது ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க இந்தியா கூட்டணி முயற்சி மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் தொடர்பான டிரெண்டிங் தெரிந்தவுடன் இந்தியா கூட்டணியில் இருக்கும் சரத்பவார், தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆந்திராவில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, 16 மக்களவை தொகுதிகளையும் வென்றுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழக்க தயார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் அறிவித்திருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் நேரடியாக சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது எனலாம். அதேபோல் பீகாரில் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார் 14 தொகுதிகளை வென்றுள்ளார். அவர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தான் பாஜக கூட்டணிக்கு சென்றார் என்பதால் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு வருமாறு நிதீஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் குமாரும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த பீகார் மாநில துணை முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லையாம். இது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதனை தடுக்க பாஜகவும் களத்தில் குதித்திருக்கிறது. இதனால் தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ