71 மக்களவை தொகுதிகளுக்கான 4வது கட்ட வாக்குப்பதிவு துவங்கியது!!
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது!!
மக்களவை தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், அனில் அம்பானி, நடிகை பிரியங்கா சோப்ரா...
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது!!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் 4வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. ஒடிசாவில் எஞ்சிய 41 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் நேரடி பலப்பரீட்சை நடத்துகின்றன.
அமைதியாகவும், பாதுகாப்பாகவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், எஸ்எஸ் அலுவாலியா, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், நடிகை ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட 945 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.