ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என செய்திகள் வெளியாகின. அதுக்குறித்து நியூஸ் ஏஜென்சி ANI உடனான நேர்காணலில், அக்கட்சியின் தலைவர் நவீன் பாட்நாயக் தெளிவுபடுத்தி உள்ளார். அதாவது தேர்தலை பொருத்த வரை காங்கிரஸ் மற்றும் பாஜக-விடம் இருந்து சம அளவு விலகியே இருப்போம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் பிஜு ஜனதா தளம் மெகா கூட்டணியில் ஐக்கம் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக செவ்வாயன்று நவீன் பட்நாயக், மெகா கூட்டணியில் இணைவது குறித்து தனது கட்சி முடிவு செய்யும். அதற்காக சில காலங்கள் தேவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒடிசாவை பொருத்த வரை பாஜக நன்கு காலுன்ற முயற்சித்து வருகிறது. ஒருவேளை பிஜு ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக் அறிவித்துள்ளார்.


ஒடிசாவில் மொத்தம் 21 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது. பி.ஜே.டி 20 இடங்களில் வெற்றி பெற்றது. அதனால் வரும் மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருகின்றது.