பிரதமர் மோடிக்கு கூழாங்கல் லட்டு மட்டுமே கொடுக்கப்படும். ஒரு ஓட்டு கூட கொடுக்கமாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடனான நேர்க்காணலில் பிரதமர் மோடி குடும்பத்தினர் உட்பட அவரது வாழ்க்கையின் பல அம்சங்கள், பிரதம மந்திரியாக அவரது பயணம், எதிர்ப்பில் உள்ள நண்பர்கள், தன் இயல்பு, வேலை பார்க்கும் ஸ்டைல், அரசியல் நண்பர்கள் என பல நிகழ்வுகளை குறித்து பகிர்ந்துகொண்டார்.


அப்போது பிரதமர் மோடி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி பேசினார். ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி தனக்கு குர்தா மற்றும் இனிப்புகளை அனுப்புவார் என்று கூறினார். 


பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி பதில் அளித்தார். அவர் கூறியது, பிரதமர் மோடி முன்பு மேற்கு வங்கத்திற்க்கு வரவில்லை. தற்போது ஓட்டு வேண்டும் என்பதற்காக வருகிறார். வங்காள மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு நாம் ரசகுல்லா(இனிப்பு) வழங்குவோம். இந்த ரசகுல்லா மண்ணால் செய்யப்பட்டு, அதனுள் கூழாங்கல் போட்டி கொடுப்போம். அதை சாப்பிட்டால் பிரதமரின் பற்கள் உடைந்து விடும் எனக் கூறியுள்ளார்.