#IndiaKaDNA: தேர்தலை விட பாலகோட் தாக்குதல் முக்கியமாக இருந்தது- நிர்மலா சீதாராமன்
ZEE news மீடியா தளத்தில் இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்று, தங்கள் அரசியல் நிலைப்பாடு குறித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேசினார்கள்.
2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் ஆட்சி அமைக்கும் பாதையைத் தீர்மானிக்கும் பிரச்சினைகள் என்னவாக இருக்கும். இந்த கேள்விகளை கண்டுபிடிக்க இன்று, ZEE NEWS மூலம் #IndiaKaDNA மேடையில் அரசியல் தலைவர்களின் மிகப்பெரிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாடு மூலமா அரசியல் அரங்கில் நீங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களைப் பெறுவீர்கள்.
இந்த மாநாடு மூலம் பல தலைவர்கள் பல கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதில் ஒருவாராக பங்கேற்ற நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறியதாவது,
> தேர்தலை நடத்துவது, நடத்தாமல் இருப்பதை விட பாலகோட் தாக்குதல் நடத்தியது நாட்டுக்கு மிக முக்கியமாக இருந்தது.
> தாக்குதலைக் குறித்து சான்றுகள் காட்ட வேண்டும் எனக் கூறுவது சரியா? இராணுவம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் தொடர்ந்து சான்றுகளை காண்பிக்க வேண்டுமா? நாட்டின் பாதுகாப்பை பற்றி மட்டும் தான் அரசு சிந்திக்கும். எதிர்கட்சியை பற்றி அல்ல..
> துல்லியத்தாக்குதலின் போதும் சரியான நேரத்தில் ஆதாரங்கள் காட்டப்பட்டது. அதேபோல அதற்க்கான நேரம் வரும்போது வான்வழி தாக்குதல் குறித்த ஆதாரம் வெளியிடப்படும்.
> இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் மிகவும் சரியான வீரர் ஆவார். நான் அ`விங் கமாண்டரை சந்தித்து வாழ்த்துக்களை கூறினேன். அவர் நாட்டிற்கான உத்வேகம் ஆவார்.
> வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அன்று, இரவு முழுவதும் கண்விழித்து வேலை பார்த்தேன். காலை 4 மணியளவில் நமது விமானிகள் பாதுகாப்பாக திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
> தேசிய ஜனநாயக கூட்டணியில் காலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிறைய பணிகள் செய்யப்பட தேவை உள்ளது. நாட்டின் பாதுகாப்பு துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். அதற்க்கான பணிகள் இன்னும் நிறைவு செய்யவில்லை.
> புல்வாமா தாக்குதலை குறித்து எதிர்கட்சிகளின் அணுகுமுறை துரதிருஷ்டவசமானது. இதன்மூலம் தங்கள் தோல்வியை எதிர்க்கட்சி தேர்ந்தெடுத்து உள்ளது.
> "மிஷன் சக்தி" குறித்து பிரதம மந்திரி அறிவிப்பது சரியானது. விண்வெளி துறை PMOல் வருகிறது, அதனால் தான் அவர் அறிவித்தார்.
> டி.ஆர்.டி.ஓ.யின் "மிஷன் சக்தி" வெற்றியை பற்றி பிரதமர் மோடி அறிவித்ததை எதிர்கட்சிகளின் எதிர்த்து தவறானது. தேசிய விஷயங்களில் அரசியலை நடத்துவது சரியல்ல.
>சில தலைவர்களும், அரசியல் கட்சிகளும் இராணுவத்தை கேள்வி கேட்பதை மக்கள் பார்த்து வருகின்றனர். அதை பொதுமகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.