வாரணாசி: உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரமாண்ட வாகனப்பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாளை பாராளுமன்ற தொகுதி வாரணாசியில் வேட்பு மனு பிரதமர் தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், இன்று பிரமாண்ட பேரணியில் திறந்த ஜீப்பில் நின்றப்படி கலந்துக்கொண்டு வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



பேரணி மாநாட்டிற்கு வருவதற்கு முன், பிரதமர் மோடி தனது ட்வீட் பக்கத்தில், "காசி சகோதரர்கள், சகோதரிகளை சந்தித்த மற்றொரு பொன்னான வாய்ப்பு. ஹார ஹார மஹாதேவ் எனப் பதிவிட்டுள்ளார். 


வாரணாசியில் நடைபெற்று வரும் பிரமாண்ட வாகனப்பேரணி சுமார் 7 கி.மீ. வரை இருக்கும். இந்த பேரணியில் கலந்துக் கொள்வதற்காக வாரணாசி தெருக்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.



இந்த பிரமாண்ட வாகனப்பேரணியில் அமித் ஷா, யோகி, ஜே.பி. நாட்ட, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், பியூஷ் கோயல் உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு உள்ளனர். பிரமாண்ட பேரணியை அடுத்து வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.