2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் மூன்றாவது தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பகுதிக்கு சென்றார். அப்பொழுது துல்லிய தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலைக் குறித்து பேசியவர், காங்கிரஸையும் கடுமையாக தாக்கி பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது,


வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நீங்கள் வாக்கு இயந்திரத்தில் உள்ள தாமரை சின்னத்தை அழுத்தினால்,  பயங்கரவாதிகள் மத்தியில் பீதி இருக்கும். அவர்கள் பதட்டம் அடைவார்கள். 


எனக்கு ஒரு விசியம் புரியவில்லை, இது சர்தார் வல்லபாய் பட்டேலின் காங்கிரஸா? அல்லது நேதாஜியின் காங்கிரஸா? நாடு முழுவதும் பாலகோட் தாக்குதலைக் குறித்து பெருமையாக தேசிய உணர்வோடு ஒரே கருத்தை கூறும்போது, காங்கிரஸ் மட்டும் வெவ்வேறான கருத்துக்களை கூறி வருகிறது. அதேபோல இங்கு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆட்சி செய்யும் நினைப்பவரும்(முப்தி) அப்படியே பேசுகிறார்கள். இவர்களுக்கு நாட்டின் நலனில் அக்கறை இல்லை.


விமானத் தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களுக்கு குடும்பம் தான் அவசியம். அவர்களுக்கு நாட்டின் மீது அக்கறையோ, அவசியமோ இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு என்ன ஆகிவிட்டது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


இன்று காஷ்மீரின் இந்த நிலைமைக்கு காங்கிரஸ், என்.சி., பி.டி.பி கட்சிகள் தான் முக்கிய காரணம். இவர்களிடம் பெரிய மற்றும் கடுமையான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் இல்லை. நாட்டின் காவலாளியை குறை கூறுவதில் தான் இவர்களின் கவனம் இருக்கிறது.


ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என் முன்னால் எவ்வளவு பெரிய சக்தி வந்தாலும், இந்த காவலாளி (சொக்கித்தார்) அவர்களுக்கு முன்னால் உறுதியாக நிற்ப்பான். நாட்டிக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபட நினைக்கும் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பாக்கிஸ்தானைப் போன்ற நாடுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், அவர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.