எனது தொடர்பில் 40 MLA-க்கள் - மே 23க்குப் பிறகு மம்தா தப்ப முடியாது: மோடி
மே 23க்குப் பிறகு அனைத்து பக்கங்களிலும் தாமரை பறக்கும். தேர்தலில் தோல்வி ஏற்ப்பட்டு மம்தா காணமல் போவார்.
மே.வங்காளம்: 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கண்கள் மேற்கு வங்க மாநிலத்தின் மீது உள்ளது. அதனால்தான், மோடி தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மேற்கு வங்க மாநிலத்தின் ஸ்ரீராம்பூரில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வாங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
மம்தா பானர்ஜி மேற்கு வங்க மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். அதனால் வரும் மே 23 தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அவர் காணமல் போவார்(தேர்தலில் தோல்வி ஏற்ப்படும்). மக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. மே 23க்குப் பிறகு அனைத்து பக்கங்களிலும் தாமரை பறக்கும். அப்பொழுது உங்கள் வேட்பாளர் மற்றும் தலைவர்கள் உங்களை விட்டு வெளியேறி விடுவார்கள். திரிணாமுல் காங்கிரசு கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்களில் எங்கள் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
விரைவில் மம்தா பானர்ஜிக்கு ஓய்வு அளிக்கப்படும். தற்போது தீதி(மம்தா) மிகவும் கோபமாக இருக்கிறார். அவரின் கோபத்தை பார்த்து, அவர்களின் கட்சி நிர்வாகிகள் கூட தீதிக்கு முன்னால் செல்ல பயப்படுகிறார்கள்.
மம்தா பானர்ஜி மக்களை ஏமாற்றி உள்ளார். ஆனால் அவரால் ஜனநாயகத்தை ஏமாற்ற முடியாது. எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும், பயமுறுத்தினாலும், இப்போது பொதுமக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களின் முடிவுகளை மாற்ற முடியாது.
சிட் ஊழல் வழக்கில் தங்கள் கட்சிக்காரர்களை காப்பாற்றவே மம்தா பணிபுரிகிறார். இதற்கு பொதுமக்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள். பொதுமக்கள் தவறுகளை மன்னிக்கக்கூடும் ஆனால் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள் எனக் கடுமையாக சாடி பேசினார்.
சில இடங்களில் வெற்றி பெற்று தில்லிக்கு செல்ல முடியாது என்று மமதா பானர்ஜிக்கு நன்றாக தெரியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என வேலை செய்கிறார்.