Election Commission of India: இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இன்று சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகள் இந்தியா முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும். இது அரசு மற்றும் மக்களின் இயல்பான செயல்பாட்டை கணிசமாக மாற்றத்தை கொண்டு வரும்.  வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தலை நடந்த அரசியலமைப்பு விதிகளின் கீழ், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான சில கடுமையான விதிமுறைகளை நிறுவி உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்


தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்:


- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவொரு நிதி சம்பந்தமான அறிவிப்பையும், தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்க முடியாது. 


- புதிய திட்டங்களுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டவோ, எந்த வகையான மக்கள் திட்டங்களுக்கு கையெழுத்திடவோ அல்லது திட்டங்களையோ துவக்கி வைக்கவோ அனுமதி இல்லை.  இவற்றை அரசு ஊழியர்கள் மட்டுமே செய்ய முடியும்.


- புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி செய்து தருவது போன்ற மற்றும் இது தொடர்பான எந்த ஒரு வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை சில கூடாது.  


- ஆளும் கட்சிக்கு ஆதரவாக மக்களிடம் மறைமுக பிரச்சாரம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக பணியிடங்களை நியமிக்க கூடாது.  


- அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு மானியங்கள் அல்லது கொடுப்பனவுகளை கொடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது.  


- தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, தேர்தல் பணிகளுடன் உத்தியோகபூர்வ வருகைகளை இணைக்க முடியாது. மேலும் தேர்தல் பணிகளுக்கு உத்தியோகபூர்வ இயந்திரங்கள் அல்லது பணியாளர்களைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறுகின்றன.


- விமானங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்தை தேர்தலின் போது ஆளுங்கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்த கூடாது.  இது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


- தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்கான இடங்கள் மற்றும் ஹெலிபேடுகள் போன்ற பொது இடங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஒரே விதிமுறையின் கீழ் கொடுக்கப்பட வேண்டும்.


- தேர்தல் நேரத்தில் செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் அரசின் பணத்தில், அரசியல் செய்திகள் மற்றும் சாதனைகள் தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற கூடாது. இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.


- அதே போல பொதுமக்கள் முறையான ஆவணங்கள் இன்றி ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல முடியாது.  சோதனையின் போது அப்படி ஏதேனும் பணம் சிக்கினால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.


- அரசு ஓய்வு இல்லங்கள், பங்களாக்கள் அல்லது பிற அரசு விடுதிகள் ஆளும் கட்சி வேட்பாளர்களால் பயன்படுத்த கூடாது. அவற்றைப் பிரச்சார அலுவலகங்களாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது எந்தக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்திற்காக அல்லது பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.


மேலும் படிக்க - மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி - ஆ.ராசா எம்பி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ