மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி - ஆ.ராசா எம்பி

Nilgiris MP A. Raja: மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் நரேந்திரமோடி என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 15, 2024, 07:40 AM IST
  • நீலகிரி தொகுதியில் ஆ ராசா முகாம்
  • மதச்சண்டை ஏற்படுத்தி பிரதமராக நினைக்கிறார்
  • பிரதமர் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டு
மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி - ஆ.ராசா எம்பி title=

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் நரேந்திரமோடி என அவர் பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டினார். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பாஜக பயப்படுகிறது என கூறிய ஆ ராசா, மதவாதம் ஊழலை எதிர்த்து நிற்கும் ஒரே கட்சி திமுக. எல்லோரும் வருமானத்துறை அமலாக்கத்துறையை கண்டு பயப்படுகிறார்கள் என காரசாரமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய ஆ ராசா, "எதைக் கண்டும் பயப்படாத இயக்கம் திமுக. தாளவாடியில் சமத்துவத்தை நான் பார்க்கிறேன். ஒரே காம்பவுண்டிற்குள் மாரியம்மன் கோவில், சர்ச், நடுவில் மசூதி இருக்கும் இந்த பூமி சமத்துவத்தை வலியுறுத்துகிறது. நமக்குள் என்ன சண்டை. ஆனால் மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் எனக் கூறி மதப் பிளவை ஏற்படுத்துகிறார்கள்." என தெரிவித்தார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு.. தமிழக மக்களிடம் ஓட்டு கேட்பது நியாயமா? ஸ்டாலின் விளாசல்

மேலும், "இந்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இனி யார் என்பதை தலைவர்தான் தீர்மானிப்பார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னும் பத்து ஆண்டு கழித்து நான் இங்கு வந்தாலும் அல்லது நீங்கள் என்னை பார்க்க வந்தாலும் என்னை தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு அளித்த உங்களுக்கு நான் எப்போதும் உரிய மரியாதை தருவேன்" என நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.

நீலகிரியில் யார் போட்டி?

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ ராசா மீண்டும் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அதனால் அவர் இப்போது தொகுதி பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்து யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது மட்டுமே சஸ்பென்ஸாக இருக்கிறது. பாஜக சார்பில் எல் முருகன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகிவிட்டார். அதனால் அதிமுக மற்றும் பாஜக சார்பில் நிறுதப்படும் வேட்பாளர் குறித்த விவரம் தெரியாததால் அந்த தொகுதியில் ஆ ராசா இப்போதே முன்னணியில் இருக்கிறார்.

மேலும் படிக்க | 'பிரதமரை தரக்குறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின்' - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News