இந்தியா கூட்டணிக்கு அடுத்த அதிர்ச்சி: ஜம்மு காஷ்மீரில் முரண்டுபிடிக்கும் கூட்டணி கட்சிகள்
Lok Sabha Elections: மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்கு பெரும் இடியாக, இந்த கூட்டணியின் நீண்டகால கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியும் (National Conference) மக்கள் ஜனநாயக கட்சியும் (People's Democratic Party) காஷ்மீரில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.
பிடிபியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் ஒத்துப்போகாத தன்மையே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறினார். "தேர்தல் களத்தில் நுழைவதைத் தவிர தேசிய மாநாட்டு கட்சி எங்களுக்கு வேறு வழியை விட்டு வைக்கவில்லை” என்று முஃப்தி தெரிவித்தார். தனது கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) காஷ்மீருக்கான மூன்று வேட்பாளர்களையும் விரைவில் அறிவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா (Omar Abdullah) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிடிபி தங்கள் தேர்தல் நிலைப்பாட்டையும் பிரச்சாரத்தையும் தொடர்ந்தால், சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்கால கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் மூடப்படும் என்று கூறினார். "பிடிபியின் முடிவு எங்களைக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டுகிறது" என்று அப்துல்லா அறிவித்தார்.
இரு பிரிவினரும் வரவிருக்கும் தேர்தல் மோதலுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள் பிளவு பல வித சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணியின் கட்சிகளுக்குள் நிலவும் வேறுபாடுகளுக்கும் விட்டுக் கொடுக்காத நிலைக்கும் இது மற்றொரு எடுத்துக்காட்டாக முன்வந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முஃப்தி (Mehbooba Mufti), “உமர் அப்துல்லா என்னுடன் கலந்தாலோசித்திருந்தால், காஷ்மீரின் நீட்டித்த நலனுக்காக பிடிபி யோசித்திருக்கும். எங்களை எதுவும் கேட்காமல் அவர் முடிவு எடுத்தார். பிடிபிக்கு எதிரான உமர் அப்துல்லாவின் கருத்துக்களால், எங்கள் தொண்டர்கள் பாதிக்கப்பட்டனர். நாங்கள் இரண்டு முறை ஆட்சிக்கு வந்துவிட்டோம், ஆனால் இன்னும் ஒமர் அப்துல்லா பிடிபி (PDP) கட்சியே இல்லை என்று கூறுகிறார். உமர் அப்துல்லாவின் செய்தியாளர் சந்திப்பு துரதிர்ஷ்டவசமானது. கட்சித் தொண்டர்களின் நம்பகத்தன்மை மேல் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே சவாலான சூழலை எதிர்கொண்டிருக்கும் எங்கள் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் இது. இப்போது தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் பேசிய பிறகு, அதற்கு பதிலளித்த ஒமர் அப்துல்லா, "மெகபூபாவின் கட்சி குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் எதுவும் கூறவில்லை. ஜம்மு-காஷ்மீர் தொகுதிகளில் அவர் போட்டியிடுவது அவரது முடிவு. அதன் அடிப்படையில் வேட்பாளர்களை நாங்கள் அறிவித்தோம். லோக்சபா வேட்பாளர்களை DDC தேர்தல்களின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்தோம். இருப்பினும், பிடிபி 2014 சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. நாங்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் இருந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் கதவுகளைத் திறந்து வைத்தோம், ஆனால் அவர் அவற்றை மூடிவிட்டதாகத் தெரிகிறது. சட்டமன்றக் கூட்டணியும் இருக்காது என்று தோன்றுகிறது" என்று கூறினார்.
பரூக் அப்துல்லா தேர்தலில் போட்டியிட மாட்டார்
இதனிடையே, மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா (Farooq Abdullah), வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக ஃபரூக் சாஹாப் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி (NC) தெற்கு காஷ்மீரில் இருந்து மியான் அல்தாப்பை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. மேலும் ஜம்மு பகுதியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ