COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.



பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல்..... 


பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.


கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் இருந்து வருகிறது. தமிழகம் மட்டும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


இந்நிலையில், நாடு முழுவதும் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.


இதன்மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16வது ஷரத்துகளை திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  இன்று நிறைவேறியது. நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.


நாட்டில் உள்ள பொதுப்பிரிவினரை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரத்திற்கு விவாதம் நடைபெற்றது. பின்னர், எதிர்க்கட்சியான காங்கிரஸும் சேர்ந்து வாக்களிக்க, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
 
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாளை இந்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.