சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 79.95 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.08ஆகவும் விற்பனை ஆகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.08ஆகவும் விற்பனை செய்யப்படுவதால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.  


இந்நிலையில், இது குறித்து அகில இந்திய தரை வழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் கூறும்போது,,,!


டீசல் விலை கடந்த 6 மாதங்களில் சுமார் 6 1\2 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் 3ம் நபர் காப்பீட்டுத்தொகை 40% உயர்ந்துள்ளது, 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றின் காரணமாக லாரி தொழில் நலிந்து வருவதாகவும் டீசல் விலையை குறைக்க அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 


இக்கோரிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது இவ்வாறு அவர்கள் கூறினர்.