சத்தமா பாட்டு கேட்டது குத்தமா? பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்!
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பக்கத்து வீட்டுக்காரர் பாடலை அதிக சத்தத்தில் வைத்து கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை: எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பக்கத்து வீட்டுக்காரர் பாடலை அதிக சத்தத்தில் வைத்து கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் என்ன செய்வதென்று அறியாமல் பலரும் விபரீத முயற்சியில் ஈடுபட்டு விடுவர். சிலரோ கோபத்தை அடக்கி அமைதியாக சென்றுவிடுவர், சிலருக்கு கோபம் தலைக்கேறி கொலை செய்துவிடும் நிலைக்கு ஆளாகின்றனர். இதைப்போல தான் ஒரு சாதாரண விஷயம், கொலை வரை கொண்டு போயிருக்கிறது.
ALSO READ | வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதியா?
மல்வானியிலுள்ள அம்புஜ்வாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திர குமார் குன்னார்(40). இவரது பக்கத்து வீட்டில் சைஃப் அலி சந்த் அலி ஷேக்(25) என்பவரும் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சுரேந்திர குமார் குன்னார் தனது வாசலில் டேப் ரெக்கார்டர் வைத்துக்கொண்டு அதிக ஒலியுடன் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த அதிக இரைச்சல் பக்கத்து வீட்டில் வசிக்கும் சைஃப் அலியை எரிச்சலடைய செய்துள்ளது. இதனையடுத்து அவர் சுரேந்திர குமாரிடம் சென்று சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ, சைஃப் அலி சொன்னதை சிறிதும் பொருட்படுத்தாது, அதிக ஒலியுடனே பாடலை கேட்டு வந்துள்ளார்.
பின்னர் சைஃப் அலி மீண்டும் மீண்டும் சென்று அவரிடம் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுள்ளார், ஆனால் சுரேந்திர குமார் அவரின் வார்த்தைக்கு செவி சாய்க்காமல் பாடலை அதே ஒலியுடன் கேட்டு கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சைஃப் அலி, சுரேந்தரை தாக்கினார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யும் நோக்கத்தில் சைஃப் அலி அவரைத் தாக்கவில்லை என்றும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தான் சுரேந்திர குமார் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் சைஃப் அலியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ALSO READ | கத்ரினா-விக்கி திருமண விழா ஒளிபரப்பு உரிமத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR