ஜம்மு: ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவைக் கொண்ட குறைந்த தீவிர நிலநடுக்கம் வியாழக்கிழமை (ஜூலை 24) ஜம்மு-காஷ்மீரின் (Jammu Kashmir) கத்ரா பகுதியில் ஏற்பட்டது. நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, இன்று அதிகாலை 5:11 மணிக்கு கத்ராவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த காயமோ அல்லது சொத்து இழப்போ ஏற்பட்டது குறித்து அறிக்கை எதுவும் வரவில்லை.


கத்ராவின் (Katra) கிழக்கே 89 கி.மீ தொலைவில் இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிய வந்துள்ளது. கத்ராவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜூலை 17 அன்று, ரியாசி மாவட்டத்தின் கத்ராவிலிருந்து கிழக்கே 88 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது


முன்னதாக, ஜூலை 8 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் ராஜோரி அருகே 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது.


சமீப காலங்களில் நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் குறைந்த தீவிரம் கொண்ட நில நடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். குறிப்பாக, தலைநகர் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் பல முறை பூமி அதிர்வைக் கண்டுள்ளது. இது குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ள நிலநடுக்கவியல் ஆய்வாளர்கள், இந்த குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கங்கள், ஒரு தீவிர நில அதிர்விற்கான முன்னோடியாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.


ALSO READ: Tsunami Warning: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை!!


இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பல நாடுகளில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனா தொற்றால் உலகம் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயற்கையின் அச்சுறுத்தல்கள் இன்னும் பீதியை அதிகரித்துள்ளன. 


ALSO READ: பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தார் Google சுந்தர் பிச்சை!