சண்டிகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ரூ.8.49 கோடி கொள்ளையடித்த வழக்கில் மூளையாக செயல்பட்ட மோனா என்ற மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திருட்டைக் கண்டுபிடிக்க லுதியானா போலீஸ் 'கேஜ் தி குயின் பீ' என்ற பெயரில் திட்டம் வகுத்தனர். திட்டமிட்டு செயல்பட்ட போலீசார் பணத்தை திருடிய தம்பதிகளை சாதுர்யமாக கைது செய்தனர். தம்பதியினர் கைது செய்யப்பட்டதை போலீஸ் கமிஷனர் மந்தீப் சிங் சித்து உறுதிப்படுத்தியுள்ளார்.


பணத்தைத் திருடிய தம்பதிகளுடன், அவர்களது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, மன்தீப்பும் அவரது கணவரும் நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாக போலீஸார் சந்தேகித்தனர்.


மேலும் படிக்க | பண பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.. இல்லை என்றால் சிக்கல் தான்!


இந்த திருட்டு வழக்கில், இதற்கு முன்னதாக, குற்றவாளிகளான மஞ்சிந்தர் சிங் மணி, மன்தீப் சிங், ஹர்விந்தர் சிங், பரம்ஜீத் சிங், ஹர்பிரீத் சிங் மற்றும் நரீந்தர் சிங் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.5 கோடியை மீட்டனர்.


கடந்த வாரம் லூதியானா நகரத்தைச் சேர்ந்த பண மேலாண்மை நிறுவனமான சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் லிமிடெட் (CMS-Connecting Commerce) அலுவலகத்தில் 8.49 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளைக்கு சூத்திரதாரியாக இருந்தவருக்கும், ஒரு பெண் தலைமையிலான கும்பலுக்கும் இடையே இருந்த ஒரு 'காதல் கோணம்' வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஒரே இரவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பெண்ணின் கனவு, இந்தக் கொள்ளைக்கு அடிப்ப தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பத்து பேருக்கும், பரஸ்பம் மிகவும் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. கொள்ளையர்கள் என்று கூறப்படும் கும்பல் மந்தீப் கவுர் என்பவரால் வழிநடத்தப்பட்டது, அவரது கணவர் மற்றும் உறவினரும் திருட்டுக்கு துணையாக செயல்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!


சிஎம்எஸ் இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிய மஞ்சிந்தர் சிங் மணியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே இரவில் பணக்காரர் ஆவதே குற்றம் செய்ததன் நோக்கம் என்பது முதல் பார்வையில் தெரிகிறது என்று போலீஸ் கமிஷனர் சித்து கூறினார்.


கைப்பற்றப்பட்ட பணத்தாள்களின் மூட்டைகளை பத்திரிகையாளர்களிடம் காட்டிய சித்து, மந்தீப் கவுருக்கும் மஞ்சிந்தர் மணிக்கும் இடையே நெருக்கம் அதிகம் என்று கூறினார். கவுருக்கு வெளிநாடு செல்ல பணம் தேவைப்பட்டது, அதற்காக அவர் இந்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளார்.


பஞ்சாபைச் சேர்ந்த சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காவல்துறை ஜிபிஎஸ் (GPS (Global Positioning System))முறையைப் பயன்படுத்தியது. பணத்தைப் பாதுகாப்பதில் நிறுவனம் அலட்சியமாக இருந்ததால், திருடர்கள், சுலபமாக கொள்ளையடித்துச் சென்றதாக சித்து குற்றம் சாட்டினார்.


மேலும் படிக்க | காணாமல் போன 88 ஆயிரம் கோடி... எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் - யார் பொறுப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ