ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்ஹாரா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 


இதனை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


இதையடுத்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.