மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவர்களின் மகன் நகுல் நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 



இன்று வெளியான பட்டியலில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவர்களின் மகன் நகுல் நாத் இடம்பிடித்துள்ளார். நகுல் நாத் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதைவேலையில் கந்த்வா தொகுதியில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அருண் யாதவ், ஜபல்பூரில் விவேக் தங்கா போட்டியிடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் கமல் நாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல் நாத், கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் நாள் மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராகவோ, மாநிலங்களவை உறுப்பினராகவோ இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும். எனவே வரும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் சக்சேனா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.