நாய்க்கு தனது சொத்தை எழுதி வைத்த விவசாயி... காரணம் என்ன..!!
பொதுவாக, தந்தையின் சொத்தில் குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு, ஆனால் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் ஒரு விசித்திரமான வழக்கு வந்துள்ளது.
பொதுவாக, தந்தையின் சொத்தில் குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு, ஆனால் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் ஒரு விசித்திரமான வழக்கு வந்துள்ளது. பாரிபாடா கிராமத்தில் வசிக்கும் ஓம் நாராயண் என்ற விவசாயி தனது சொத்தில் பாதியை தனது நாய் ஜாக்கிக்கும், பாதி மனைவி சம்பாவுக்கும் கொடுத்துள்ளார். ஓம் நாராயண் தனது மகன்களுக்கு பதிலாக தன்னுடைய நாயின் பெயரிலும் மனைவியின் பெயரிலும் சொத்தை ஏன் எழுதி வைத்தார் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,
மகன்களின் நடத்தையால் மனம் உடைந்து போன விவசாயி ஓம் நாராயண், மனைவி பெயரில் பாதி சொத்தையும் நாயின் பெயரில் மீதி சொத்தையும் எழுத முடிவு செய்தார். ஓம் நாராயணனுக்கும் அவரது மகன்களுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது மகன்களுக்கு தனது சொத்துக்கள் போய் சேரக் கூடாது என முடிவு செய்தார்.
தனது நாயின் பெயரில் உயில் எழுதி வைத்து, அதனை தனது வாரிசாக அறிவித்தார்.
ஓம் நாராயண் சட்ட பூர்வமாக தனது நாயை தனது வாரிசாக அறிவித்துள்ளார். ஓம் நாராயண் தனது உயிலில், 'என் மனைவியும் செல்ல நாயும் தான் எனக்கு சேவை செய்கின்றன, எனவே அவை எனக்கு மிகவும் பிரியமானவை.
ஓம் நாராயண் தனது உயிலில், தனது மரணத்திற்குப் பிறகு எனக்கு முழு சொத்து மற்றும் அதன் உரிமை, தனது மனைவியையும் நாயையும் பார்த்துக் கொள்பவருக்கு கிடைக்கும் என தனது உயிரில் எழுதியுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக, மனம் உடைந்த ஓம் நாராயண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ALSO READ | சார்... இந்த கிராமத்திற்கு போக கொஞ்சம் வழி சொல்ல முடியுமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR