மத்திய பிரதேச மாநில ஆளுநர் இருக்கும் ஆனந்திபென் பட்டேல் அம்மாநில ஹார்டா மாவட்டத்தில் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் உறையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என குறிப்பிட்ட பேசினார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ‘நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்து அவர் நன்றாக அறிந்தவர் என குறிப்பிட்டு பேசினார்.


பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என மோடி குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேசிய உறையினை அப்பகுதி மக்கள் வீடியோவாக படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.


யார் இந்த ஆனந்தி பென் பட்டேல்...


குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 26, 2014 அன்று பிரதமராக பதவியேற்றார். அவர், முதல்வர் பதவியில் இருந்து விலகியதும் ஆனந்திபென் பட்டேல் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றார்.