வருகிறது மாடுகளுக்கும் சாக்லேட்! அசத்தும் பல்கலைக்கழகம்!
மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி மாடுகளுக்கும் வருகிறது சாக்லேட்,அசத்தும் பல்கலைக்கழகம்
மத்திய பிரதேசம்: மாடுகளுக்கு தீவனத்திற்கு பதிலாக சாக்லேட்டை மத்தியபிரதேசத்திலுள்ள ஜபால்பூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
கால்நடைகள் (Livestock) என்பவை வேளாண்தொழில் சூழலில் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் ஆகும். கால்நடைகள் அவற்றின் உழைப்புக்காகவும் இறைச்சி, முட்டை, பால்,முடி, தோல், கம்பளி போன்ற பொருள்களுக்காகவும் பயன்படுகின்றன. பொதுவாக கால்நடைகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம்.அதிலும் குறிப்பாக மாடுகள் மேய்ச்சலுக்கு அதிகமான நேரங்களை எடுத்துக்கொள்ளும்.அவை எந்த அளவிற்கு தீவனங்கள் உட்கொள்ளுமோ அந்த அளவிற்கு பால் உற்பத்தியை தரும்.
இவ்விலங்கின் பால் மனிதனுக்கு மிக உபயோகமான மற்றும் அடிப்படையான திரவ உணவாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து மிகுந்த திரவ உணவாகும். இதன் பால் மட்டுமின்றி இதன் பயன் எண்ணிலடங்காதது. ஆண் விலங்கு எருது என அழைக்கப்படுகிறது. நிலத்தில் பயிர் செய்ய ஏதுவாக அதனை உழுவதற்கு பயன்படுத்தி உழுகிறார்கள். இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ள ஜபால்பூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் பல்வகை வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட சாக்லேட்டை மாடுகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.
இதனை மாடுகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த சாக்லேட்டுகளை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவற்றின் பால் உற்பத்தி திறனும், இனபெருக்க திறனும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கிப்பட்டுள்ளது. மேலும், இந்த சாக்லேட் விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ செல்போன் பேசியபடி கைக்குழந்தையுடன் சாக்கடைக்குள் விழுந்த பெண்: வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR