பெத்துல்: மத்திய பிரதேசத்தில் ஒரு இளைஞன் திருமணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்தது மற்றவர்கள் திருமணம் செய்வது போல அல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக திருமணம் செய்தார். ஆம், இந்த இளைஞன் இரண்டு இளம் பெண்களை ஒரே திருமண பந்தலில் திருமணம் செய்து கொண்டார். இருவரில் ஒருவர் அவரது காதலி, மற்றவர் குடும்பத்துக்கு பிடித்த பெண். இந்த திருமணத்திற்கு பல கிராமவாசிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கோடடோங்ரி தொகுதியின் கெரியா கிராமத்தில் ஜூலை 8 ஆம் தேதி பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் உய்கே கைது செய்யப்பட்டார். ஷெரிப் அலுவலகம் தற்போது திருமணம் எப்படி நடந்தது என்று விசாரித்து வருகிறது. கெரியா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்பை மணந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


போபாலில் படிக்கும் போது, ​​ஹோஷங்காபாத் ஒரு இளம் பெண்ணுடன் சந்தீப் தொடர்பு இருந்துள்ளது. அவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சந்தீப்பை தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளனர். பெற்றோருக்கும், மகனுக்கும் நடந்த வாதம் உயிர் மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. ​​


அதன்பிறகு இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்தின் சமதத்துடன், இரண்டு இளம் பெண்களும் சந்தீப்புடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.


அதன் பின்னர் அவரது திருமணம் கெரியா கிராமத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் மற்றும் இரண்டு மணப்பெண்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து மூன்று குடும்பங்களுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு திருமணம் செய்யப்பட்டது என கோடடோங்ரி கிராம பஞ்சாயத்து துணைத் தலைவரும் திருமணத்திற்கு சாட்சியுமான மிஸ்ரிலால் பர்ஹத் கூறினார்.