மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 28 வயதுடைய அங்கேஷ் கோஷ்திஎன்பவர் வசித்து வருகிறார். அங்கேஷின் தாயார் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார், தந்தை தையல்காரராக இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டப்படிப்பை முடித்த அங்கேஷ் 2020 முதல் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவரது திறமையை எந்த நிறுவனங்களும் ஏற்கவில்லை.


காரணம் அங்கேஷின் உயரம் 3.7 அடி. சிறு வயது முதல் பல்வேறு கேளி கிண்டலுக்கு ஆளாகிய இவர் அதனை பொருட்படுத்தாமல் எம்பிஏ பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். 


பல தடைகளை தாண்டியும் இவர் தனது இன்னல்களை முழுமையாக கடக்க முடியவில்லை. வேலை கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் உயரத்தை ஒரு குறையாக கூறி நிராகரித்துள்ளனர்.


இந்த நிலையில், குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரவீன் பதக்கிற்கு அங்கேஷ் கோஷ்தி குறித்து தெரிய வந்தது.



இதையடுத்து அங்கேஷ் கோஷ்தி குறித்து சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ பிரவீன் பதக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் சற்று வைரலானது.


அதையடுத்து, தொடர்ச்சியாக அவருக்கு பல நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. கிட்டதட்ட 35 நிறுவனங்களில் இருந்து நேர்முகத்தேர்வுக்கும், நேரடி வேலை வாய்ப்புக்கும் வாய்ப்புகள் அங்கேஷின் இல்லம் தேடி வந்தன.


அதில் ஒரு நிறுவனத்தை அங்கேஷ் தேர்வு செய்து அதில் அவர் பணியிலும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு


இதுகுறித்து எம்.எல்.ஏ., பிரவீன் பதக் கூறுகையில், “அங்கேஷ் கோஷ்தி அவரது தாயாரின் ஆதார் அட்டைக்காக என்னை சந்தித்தார். பின்னர் தனது நிலை குறித்து எனக்கு விவரித்து கூறினார். உயரம் குறைவாக உள்ள காரணத்தால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அறிந்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.” என வருத்தம் தெரிவித்தார்.


மேலும், ஏதாவது வேலை இருந்தால் தாருங்கள் என்று அங்கேஷ் கோஷ்தி தன்னிடம் கேட்டதாக எம்.எல்.ஏ., பிரவீன் பதக் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், "சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் சென்றுள்ளன. 


இறுதியாக, ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் அவரை மகிழ்விக்க எனக்குப் பதிலாக அங்கேஷை ஒருநாள் எம்எல்ஏவாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.


 



இதுகுறித்து அங்கேஷ் கோஷ்தி கூறுகையில், “என் குறையை கேட்ட எம்.எல்.ஏ., பிரவீன் பதக் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் 35-40 நிறுவனங்களில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. அவற்றில் ஒன்றை நான் தேர்வு செய்து பணியிலும் சேர்ந்துவிட்டேன். மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று தெரிவித்தார்.


இதையடுத்து எம்.எல்.ஏ., பிரவீன் பதக்கிற்கு அங்கேஷின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். 


மேலும் படிக்க | உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்...அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR