மாகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 22 பேர் காயம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2.07 மணியளவில் ஜபால்பூரில் இருந்து நிசாமூதின் செல்லக்கூடிய மாகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டது.
ரயிலின் பின் பகுதியில் இருந்த 8 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 22 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்து தளத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கும் மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் இயக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால் அலகாபாத் மற்றும் ஜான்சி இடையே ஒரு சில ரயில்கள் திசை மாற்றப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்களின் விவரங்களை குடும்பத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக உதவி எண்களையும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.