மும்பை: பி.எம்.சி (BMC) அறிக்கையின்படி, தாராவியில் இன்று மூன்றாவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது. தாராவியில் உள்ள கல்யாணவாடியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் வியாழக்கிழமை நேர்மறை சோதனை செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருடன் தொடர்புடைய நபர்களை குறித்து உள்ளூர் பிஎம்சி வார்டு அலுவலகம் விசாரித்து வருகிறது. தாராவியில் மொத்த நேர்மறையான வழக்குகள் 14 மற்றும் இதுவரை மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் 143 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் இந்த வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவின் நிதி மூலதனம் என அழைக்கப்படும் மும்பை COVID-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் மொத்த இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 162 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.  மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு 1,297 ஆக உள்ளன.


மும்பை பெருநகர மண்டலம் (MMR) மற்றும் புனே மாவட்டத்தில் இருந்து சுமார் 85% கோவிட் -19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. எம்.எம்.ஆரில் மும்பை, தானே மற்றும் நவி மும்பை ஆகியவை அடங்கும்.


ஒரே நாளில் கோவிட் -19 தொற்று காரணமாக அதிக இறப்புகளை நியூயார்க் நகரத்தில் பதிவாகியுள்ளது. ஏனெனில் ஸ்பெயினை விட 14,600 மரணங்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளன. உலகளவில், 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 5,700 க்கும் மேற்பட்டோர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் மூலம் இந்தியாவில் இதுவரை 166 பேர் இறந்துள்ளனர்.