ஜனாதிபதி ஆட்சி திணிப்புக்கு மகாராஷ்டிர தலைவர்கள் எதிர்ப்பு!
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் ஜனாதிபதி ஆட்சி திணிப்புக்கு மத்தியில், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஓட்டத்தை மாநில கட்சிகள் மீண்டும் துவங்கியுள்ளன!
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் ஜனாதிபதி ஆட்சி திணிப்புக்கு மத்தியில், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஓட்டத்தை மாநில கட்சிகள் மீண்டும் துவங்கியுள்ளன!
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி (Bhagat Singh Koshyari) பரிந்துரையை அடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை அமல் படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே செவ்வாய் மாலை மீண்டும் அரசியல் கட்சிகளிடையே பெரும்பான்மை எண்களைத் திரட்டுவதற்கான புதிய முயற்சிகள் துவங்கியது.
மாநிலத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மகாராஷ்டிரா அதிகாரப் போராட்டம் குறித்து விரிவான கலந்துரையாடலை வெளியிடுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (காங்கிரசும்) கூறியுள்ளன. சிவசேனாவுடன் பணிபுரியும் உறவை உறுதிப்படுத்திக்கொள்ள நேரம் எடுக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
"நாங்கள் எந்த அவசரமும் எடுக்கவில்லை. காங்கிரசுடன் நாங்கள் கலந்துரையாடி பின்னர் சிவசேனாவை ஆதரிக்க ஒரு முடிவை எடுப்போம்" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அவருக்கு காங்கிரஸ் தலைவர் அகமது படேல் ஆதரவு அளிக்கும் வகையில்., "நாங்கள் எங்கள் கூட்டாளியுடன் கலந்துரையாடிய பின்னர் சிவசேனாவுடன் கலந்துரையாடுவோம்." என குறுப்பிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியையும், "ஜனாதிபதியின் ஆட்சி பரிந்துரைக்கப்பட்ட விதம், அதை நான் கண்டிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி ஆட்சி குறித்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை இந்த அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் மீறியுள்ளது." என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, சிவசேனா கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மட்டுமே ஆதரவுக்காக முறையாக இரு கட்சிகளையும் அணுகியதாக NCP தலைவர் பிரபுல் படேல் சுட்டிகாட்டியிருந்தார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தது. ஆனால் இப்போது தங்கள் கட்சி காங்கிரஸ்-NCP-யுடன் செல்ல விரும்புகிறது என தெரிவித்தார். மஹாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பேசிய அவர்., "இது அரசியல். ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் பாஜக விருப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை, பாஜக தான் அதைச் செய்தது." என குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., "கடந்த நவம்பர் 11 அன்று அரசாங்கத்தை அமைப்பதற்கு காங்கிரஸ்-NCP-யின் ஆதரவை நாங்கள் முறையாகக் கேட்டுக்கொண்டோம். எங்களுக்கு 48 மணிநேரம் தேவைப்பட்டது ஆனால் ஆளுநர் எங்களுக்கு தேவையான நேரத்தை அளிக்கவில்லை." என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலம் தங்களை தொடர்புகொண்டு வருவதாகவும் உத்தவ் குறிப்பிட்டார். இதுகுறித்து உத்தவ் தெரிவிக்கையில்., "பாஜக ஒவ்வொரு முறையும் தெளிவற்ற மற்றும் வித்தியாசமான சலுகைகளை வழங்குகிறார்கள், ஆனால் நாங்கள் காங்கிரஸ்-NCP கூட்டணியோடு செல்ல முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில்., மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானே, நடந்து வரும் அரசியல் மோதலுக்கு ஒரு புதிய திருப்பத்தை அளித்துள்ளார்., "மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும். தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். நான் இப்போது பாஜக-வுடன் இருக்கிறேன், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்." என குறிப்பிட்டுள்ளார்.
மாநில முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் நடைபெற்ற பாஜக கோர் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரானே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளின்படி காங்கிரஸ் மற்றும் NCP இரு கட்சிகளும் சிவசேனாவை கவர்ந்து ஏமாற்ற முயற்சிப்பதைப் போல அவர் உணர்ந்ததாக தெரிகிறது.
"தாமதம் மற்றும் ஜனாதிபதியின் ஆட்சிக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும், அவர்கள் செய்ததைச் செய்திருக்கக் கூடாது. தேர்தல்களுக்கு முன்னர் ஒரு யுக்தி-க்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, அந்த வாக்குறுதி கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டும்," என்றார் மாநிலங்களவை எம்.பி.
பாஜக தலைவர் சுதிர் முகந்திவரும் ஜனாதிபதியின் ஆட்சி நிச்சயமாக எதிர்பாராத ஒன்று என்று கூறினார். "மக்களின் ஆணை மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் நிச்சயமாக முயற்சிப்போம். நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்போம். நாங்கள் மாநில மக்களுக்கு ஆதரவாக நிற்போம்." என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மகாராஷ்டிரா செயல் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு செய்திக்குறிப்பில் ஜனாதிபதியின் ஆட்சி துரதிர்ஷ்டவசமானது, ஆனால் விரைவில் மாநிலத்திற்கு நிலையான அரசாங்கம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில்., சிவசேனா தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட நேரத்தை நீட்டிக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. முடிவுகள் யாருக்கு சாதகமாய் அமையும் என்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது...