மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
நாளை நம்பிக்கை நடைபெற உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது ராஜினாவை அறிவித்தார். இணையத்தில் நேரடி ஒளிபரப்பின்போது ராஜினாமா முடிவை அறிவித்தார்.
பேஸ்புக் மூலம் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உரையாடிக் கொண்டிருந்தபோது தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.
தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் எதிர்ப்புக் கொடி உயர்த்திய நிலையில் இந்த ராஜினாமா அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைக் காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், தகுதி நீக்க நோட்டீஸ் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இரவு சுமார் ஒன்பது மணியளவில் அறிவுறுத்தியது.
நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த சிறிது நேரத்திலேயே உத்தவ் தாக்கரே தனது ராஜினாமை அறிவித்தார். இது மகாராஷ்டிர மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதனை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வரும் 12-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் வழங்கியது. இந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநிலஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சட்டப்பேரவை செயலருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இன்று முதலமைச்சர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR