விவசாய கடன் தள்ளுபடி: மகாராஷ்டிர அரசு, போராட்டம் வாபஸ்
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வறட்சியால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் விவசாயிகள் நடத்தினர்.
மகாராஷ்டிராவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இதற்காக தனி குழு அமைக்கப்படும் என்றும், விவசாயிகளின் தகுதிகேற்ப விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு, மகாராஷ்டிர விவசாய சங்கங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளதோடு, போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளன.