மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மம்ராவின் கான் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் திடீர் தீவிபத்து..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மும்ப்ரா ((Mumbra)) பகுதியில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.


அதில், இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததால், தீ கொளுந்துவிட்டு எரிந்து, அந்த பகுதி முழுவதையும் புகை சூழ்ந்தது.


இந்த தீடீர் தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பலமணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.