மும்பை: மகாராஷ்டிர மாநில அரசு, மாநிலத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பினை தடுக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பாதிப்பினை குறித்து பொதுமக்களிடையே விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவினை மீறுவோருக்கு ரூ.25000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி முதன் முறையாக தடையை மீறினால் ரூ.5000, இரண்டாவது முறை மீறினால் ரூ.10000, மூன்றாவது முறை மீறினால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.




மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த பிளாஸ்டிக் தடையினை வெற்றிகரமான செயல்பாடாக மாற்றலாம் என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநில அரசின் அந்த அதிரடி அறிவிப்பால், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறிந்துள்ளனர். இதனால் தெருவெங்கிலும் பிளாஸ்டிக் குப்பை மேடுகளாய் அளங்கரிக்கப்பட்டுள்ளது.


எனினும் இந்த அறிவிப்பானது நல்ல முயற்சி எனவும், இதனை வரவேற்பதாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்!