இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு Jeans, T Shirt அணிய தடை விதிக்கப்பட்டது: என்ன காரணம்?
பொது நிர்வாகத் துறை பிறப்பித்த உத்தரவின்படி பணியாளர்கள், ஆழமான வண்ணங்கள் மற்றும் விசித்திரமான எம்பிராய்டரி வடிவங்கள் அல்லது படங்களுடன் கூடிய ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஆடைக் குறியீட்டை வகுத்துள்ள மகாராஷ்டிரா இப்போது ஊழியர்களுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் செருப்புகளை அணிய தடை விதித்துள்ளது.
டிசம்பர் 8 ம் தேதி பொது நிர்வாகத் துறை பிறப்பித்த உத்தரவின்படி, பணியாளர்கள் “ஆழமான வண்ணங்கள் மற்றும் விசித்திரமான எம்பிராய்டரி வடிவங்கள் அல்லது படங்களுடன்” ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் புடவை, சல்வார், சுரிதர்-குர்தா, பேண்டுடன் சட்டை அல்லது குர்தா, தேவைப்பட்டால் துப்பட்டா அணிய வேண்டும். ஆண்கள் பேண்டுகள் மற்றும் சட்டைகளை அணிய வேண்டும். ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு முறை காதி அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்லிப்பர்களுக்கு அதாவது செருப்புகளுக்கு பதிலாக, பெண்கள் செப்பல்கள் அல்லது ஷூக்களை அணிய வேண்டும். ஆண்கள் ஷூக்கள் அல்லது செருப்புகளை அணிய வேண்டும்.
டிரெஸ் கோட் எனப்படும் ஆடைக் குறியீட்டை ஒரு மாநில அரசு விதிப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய பிரதேச அரசு (Madhya Pradesh Government) இது குறித்த ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதன் மூலம் குவாலியர் பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மங்கிப்போன ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை அலுவலகத்திற்கு அணிய தடை விதிக்கப்பட்டது. "கண்ணியமான, ஒழுக்கமான மற்றும் முறையான உடையை" அணியுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டில், இதேபோன்ற உத்தரவை பீகார் (Bihar) அரசு வெளியிட்டது. ஊழியர்கள் எந்த பதவியில் இருந்தாலும், மாநில செயலகத்தில் அவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிய தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, அவர்கள் அலுவலகத்திற்கு எளிய, நேர்த்தியான, வெளிர் நிற உடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ALSO READ: Covid-19 தடுப்பூசி போடுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
2018 ஆம் ஆண்டில், அப்போதைய ராஜஸ்தான் (Rajasthan) அரசு மாணவர்களுக்கான ஆடைக் குறியீட்டைக் கொண்டு வந்தது. கல்லூரி வளாகத்தில் மேற்கத்திய ஆடைகளைத் தவிர்த்து, சல்வார் கமீஸ் அல்லது புடவைகளை அணியுமாறு அரசு கேட்டுக் கொண்டது. இருப்பினும், இதற்கு மாணவர்களிடமிருந்து ஏராளமான புகார்களும் எதிர்ப்பும் வரவே, பின்னர் இந்த விதி ரத்து செய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு கப் பஞ்சாயத்து, பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கும், ஜீன்ஸ் அணிவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த ஆண்டு, பஞ்சாயத்து, ஆண்கள் பொது இடங்களுக்கு அரை பேண்டில் செல்ல வேண்டாம் என்றும் அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்றும் அறிவுறுத்தியது என்று ANI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: ஹரியானாவை தொடர்ந்து உத்திராகண்ட் விவசாயிகளும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு
மகாராஷ்டிரா அரசாங்கத்தின் (Maharashtra Government) புதிய ஆடைக் குறியீடு உத்தரவைப் பொறுத்தவரை, நெட்டிசன்களிடமிருந்து இதற்கு பல விமர்சனங்கள் எழும்பியுள்ளன.